Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரியில் கழிவுநீர் கலக்கும் கர்நாடகா! ஆய்வுசெய்ய உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்

காவிரியில் கழிவுநீர் கலப்பதுகுறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

Supreme Courts Orders over Sewage Mix in Cauvery River

கர்நாடகா-தமிழகத்துக்கு இடையே, நீண்ட காலமாகவே காவிரிப் பிரச்னை நீடித்துவருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிடுவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஆகியவற்றைத் தொடர்ந்து மீறிவருகிறது கர்நாடகா. இதனால், டெல்டா பகுதி விவசாய நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படுவதோடு, அங்குள்ள விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.

இந்நிலையில், காவிரியில் கழிவுநீர் கலப்பதுகுறித்து ஆய்வுசெய்ய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். காவிரியில் கழிவுநீர் கலப்பதற்கு இழப்பீடு கேட்டு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து ஆய்வு செய்து 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல்செய்ய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.  மேலும், காவிரியில் கழிவுநீர் கலப்பதால், மக்களுக்கும் சுற்றுச்சுழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close