Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனின் அந்நியச் செலாவணி மோசடி வழக்கை விசாரிக்கத் தடை!

டி.டி.வி.தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Highcourt orders to stay TTV Dinakaran FERA case

1996-ம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடிசெய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், இரண்டு வழக்குகளிலிருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், டி.டி.வி.தினகரன் மீதான வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வழக்கிலிருந்து விடுவிக்கவும்  எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கத் தடை கோரியும் டி.டி.வி.தினகரன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை
2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close