Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'365 நாளில் 160 நாள்கூட பணிக்குச் செல்வதில்லை'- ஆசிரியர் சங்க நிர்வாகிகளை எச்சரிக்கும் நீதிபதி

'365 நாள் பள்ளி செயல்படும். 160 நாள்கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்குச் செல்வதில்லை' என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தனக்கு எதிராகப் போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 42 பேரைத் தோல்விடையச் செய்ததுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஆசிரியர் சங்க அங்கீகாரத்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பியதோடு, இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, 'நீதிபதி கிருபாகரன் கருத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும்' என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எனது கருத்தை எதிர்த்துப் போராட்டம் அறிவித்தது யார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, 365 நாள் பள்ளி செயல்படும். 160 நாள்கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்குச் செல்வதில்லை. பணிக்குச் செல்லாமல் முறைகேடுசெய்வோர், ஆசிரியர் சங்கத்தைப் பயன்படுத்துகின்றனர். ஃபெயிலாக்கப்படுதை எதிர்த்து நீதிமன்றம் வருவோர், பிள்ளைகளின் நலனில் அக்கறைசெலுத்த வேண்டும்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close