Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செம்மொழி ஆய்வு மையத்தைச் சீர்குலைக்கக் கூடாது... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னையில் இயங்கும் செம்மொழி ஆய்வு மையத்தைச் சீர்குலைக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

g.ramakrishnan

இதுகுறித்து தனது அறிக்கையில், 'தமிழ், செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டு 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பிறகு, இதன் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டன. முக்கியமான பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்க வேண்டுமென பணிக்கப்பட்டது. மாநில அரசின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அதுவரையில் மைசூரில் இயங்கி வந்த ஆய்வு மையம் சென்னைக்கு மாற்றப்பட்டு 2008 முதல் சென்னையில் மத்திய தமிழ்ச் செம்மொழி ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இருப்பினும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி ஆய்வு மையம் பல பணிகளைச் செய்து வருகிறது.

 திடீரென்று நிதிஆயோக் ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு சென்னையில் சுயேச்சையாக இயங்கி வரும் மத்திய செம்மொழி ஆய்வு மையத்தை மூடிவிட்டு இதைத் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக இணைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வருகின்றன. இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசு அடுத்தகட்டமாகத் தமிழ் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்னையில் உள்ள ஆய்வு மையத்தை திருவாரூரில் உள்ள பல்கலைக்கழகத்தோடு இணைத்தால் ஆய்வு மையத்தின் சுயேச்சையான பணி பாதிப்புக்குள்ளாகும். 

சென்னையில் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்துக்கு மாற்றுகிற முயற்சியைக் கைவிடுமாறு மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும், சென்னையில் இந்த மையம் சிறப்பாகச் செயல்பட மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது' என்று தெரிவித்துள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close