Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநில அரசின் உள் ஒதுக்கீடு நீட் தேர்வு முறையைப் பாதிக்காது- உச்ச நீதிமன்றம் உறுதி

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் 85% உள் ஒதுக்கீடு, நீட் தேர்வு முறையைப் பாதிக்காது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் நீட் தேர்வு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் இந்தியா முழுவதும் 104 நகரங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருந்ததாகவும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் நீட் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து கிளம்பிவந்தது.

இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் 85% உள் ஒதுக்கீடு, நீட் தேர்வு முறையைப் பாதிக்காது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். இதையடுத்து  இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சி.பி.எஸ்.இ மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மாநில இடஒதுக்கீடு நீட் தேர்வைப் பாதிக்காது' என்று உறுதியளித்தனர். மேலும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்குத் தடை கோரிய மனுவையும் அவர்கள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close