Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆச்சர்யப்படுத்திய கணேஷ் ஆச்சார்யா!

கணேஷ்


'டலாம் பாஸ் சின்னதா டான்ஸ்' என்கிற பிரபுதேவா படத்தில் டான்ஸராகவும், ஜீவா நடித்த 'ரெளத்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்தவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் பாலிவுட்டில் பிரபலமான நடன இயக்குநர். சமீபத்தில் அவர் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 200 கிலோவில் இருந்தவர் கடந்த ஒன்றரை வருடத்தில் தன் உடல் எடையில் 85 கிலோவை குறைத்திருக்கிறார்.

'ஆச்சார்யா என்றாலே என் உடல் எடைதான் பல பேருக்கு ஞாபகத்துக்கு வரும். அந்த எண்ணத்தை மாற்றுவதற்காகத்தான், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்பினேன்' என்று சொல்லும் அவர், பல வருடங்களாக தன் எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் இருந்திருக்கிறார். பலரிடம் எடைக்குறைப்பு குறித்து ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறார்.

'எனக்கு எடைக்குறைப்பு பற்றிய கவலை ரொம்ப நாளாக இருந்தது. ஆனாலும், டான்ஸ் மீதான ஆர்வம் காரணமாக நடன இயக்குநராகப் பல படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றியிருக்கிறேன். உடல் எடையுடன் இருக்கும்போதும் டான்ஸை விட்டதில்லை. ஆனாலும், எடையைக் குறைத்த பிறகு, டான்ஸ் எனர்ஜி அதிகமாகியிருப்பதாக நினைக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close