Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரையரங்கு உரிமையாளர்களுக்கு 5 கேள்விகள்!

திரையரங்கு

கேளிக்கை வரியைக் கட்டமுடியாது என கடந்த மூன்று நாள்களாகத் தொழில்நிறுத்தம் செய்துவந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கமானது பகிரங்கமாக ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ளது.  

பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி-யால் திரைப்படத் துறைக்கும் கூடுதல் செலவு ஆகியுள்ளது என கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமோ, ஜிஎஸ்டி-யுடன் கேளிக்கை வரியையும் சேர்த்துக் கட்டமுடியாது என அறிக்கைவிட்டதுடன், கேளிக்கை வரியை ரத்துசெய்யுமாறு நான்கு நாள்களாக திரையரங்குகளை மூடி எதிர்ப்பைக் காட்டியது. கட்டணத்தை உயர்த்திவிட்டு நேற்று திடீரென தொழில்நிறுத்தத்தை நிறுத்திக்கொண்டது. இந்த சூழலில், பரவலாக திரைப்பட ரசிகர்கள் மனதிலிருக்கும் ஆதங்கத்தை, சட்டப் பஞ்சாயத்து இயக்கமானது பகிரங்கக் கேள்விகளாக முன்வைத்துள்ளது. 

5 கேள்விகள்” எனும் தலைப்பிலான அறிக்கையில், ​”மக்கள் தலையில் வரியை, டிக்கெட் கட்டண உயர்வை சுமத்திவிட்டு வரி உயர்வு, இரட்டை வரி என்று  குமுறும்  தியேட்டர் உரிமையாளர்களுக்கு... திரைத்துறைக்கு...!

வாகன பார்க்கிங்கிற்கு  அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க மாட்டோம் என்று அறிவிக்கத் தயாரா? தியேட்டருக்குள் விற்கப்படும் உணவுப்பொருள்களை எம்.ஆர்.பி. (அதிகபட்ச விற்பனை விலை) விலையில் விற்கத் தயாரா? வெளியிலிருந்து கொண்டுவரும் உணவுப்பொருள்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை” என்ற சட்டத்துக்குப் புறம்பான போக்கை மாற்றத் தயாரா?  தியேட்டர் கவுண்டரில்  அரசால்  நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிப்போம் என்று அறிவிக்கத் தயாரா? ''சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்துக்கு சட்டப்படி நாங்கள் வரி கட்டுவோம், கறுப்புப் பண பரிமாற்றம் செய்யமாட்டோம்” என்று திரை நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்கத் தயாரா?” என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் வரிசையாகக் கேள்விகளை வைத்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close