Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட வருவாய் ஆய்வாளர்

நாகர்கோவிலில் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஷ் நடுரோட்டில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். 

revenue officer

 

குமரிமாவட்ட  நிர்வாகத்தின் மூலம் குளங்களில் மண்  எடுக்க விவசாயிகளுக்கு அனுமதிக் கொடுக்கப்பட்டுள்ளது.  நாகர்கோவில் பொட்டலில் உள்ள சாம்பக் குளத்தில் மணல் எடுக்க விவசாயி தங்கவேல் என்பவருக்கு அனுமதி வாங்கி இருந்தார். அவர் சாம்பக் குளத்தில் இருந்து மணல் எடுத்து டிராக்டர் மூலம் கொண்டு செல்ல  பாபு என்பவருடன்  ஒப்பந்தம் செய்து இருந்தார். கடந்த சில நாள்களுக்கு முன், பாபு டிராக்டரில் மணல் ஏற்றிச் செல்லும்போது நாகர்கோவில் வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஷ்  சோதனை செய்து ரசீதைக் கேட்டுள்ளார். ரசீதைக் கொடுத்த பின் தனக்கு லஞ்சம்  தரவேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதனால், பாபு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி-யும், வருவாய் ஆய்வாளருக்குப் பணம் கொடுங்கள் என்று ரசாயனம் தடவிய பணத்தைப் பாபுவிடம் கொடுத்து அனுப்பினார். லஞ்சப் பணத்தைப் பெறுவதற்காக நாகர்கோவில் கோர்ட் ரோட்டுக்கு காலையில் வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஷ் வந்தார். அவரிடம் பாபு ரசாயனம் தடவியப் பணத்தைக் கொடுக்கும் போது மப்டியில்  மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆனந்த சதீஷை பணத்தோடு மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்த பணத்தைக் கைப்பற்றி கைது செய்து அருகில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் உடனே இதுபற்றி வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்களும் துறை ரீதியான நடவடிக்க எடுக்க பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளனர். வருவாய் ஆய்வாளர் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close