Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி வரி இல்லாத ஒரு பிராண்டட் அரிசி!

ஜிஎஸ்டி வரியில் பாக்கெட் செய்யப்பட்ட அரிசிக்கும் வரி என்று விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாக்கெட் செய்யப்பட்டு, பிராண்டட் செய்யப்பட்ட ஒரு பிராண்டட் அரிசிக்கு மட்டும் வரி இல்லை.

அரிசி

ஜிஎஸ்டி வரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி-யால் பெரும்பாலான பொருள்கள் மற்றும் சேவைகளின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி இல்லாத பொருள்கள் என்று பார்த்தால் பாக்கெட் செய்யப்பட்டு பிராண்டட் செய்யப்படாத அரிசி, பருப்பு போன்ற விவசாயப் பொருள்களுக்கு ஜீரோ சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிராண்டட் செய்யப்பட்ட 'இந்தியா கேட்' அரிசிக்கும் வரி இல்லை. இது கே.ஆர்.பி.எல் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

காரணம், 'இந்தியா கேட்' அரிசி பிராண்ட் ட்ரேட் மார்க்ஸ் சட்டம் 1999-ன் கீழ்ப் பதிவு செய்யப்படவில்லை. இச்சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்படாததால் இந்தியா கேட் அரிசிக்கு ஜீரோ வரி. ஆனால், இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் அரிசி பிராண்ட் இதுதான். இந்தியா கேட் பிராண்டட் அரிசி ட்ரேட் மார்க் சட்டத்தில் பதிவு செய்ய பல முறை விண்ணப்பித்தும் பதிவு செய்யப்படவில்லை. 

இதன் போட்டியாளர்களான மெக்கார்மிக் (McCormik and Co) மற்றும் கோஹினூர் பேக்கேஜ்ட் ரைஸ் போன்றவையெல்லாம் வரி கட்டும் நிலையில் அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close