Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

" 'உடைந்த முட்டை' அ.தி.மு.க.வா? காங்கிரஸா?" - சட்டசபையில் நடந்த விவாதம்!

சட்டசபை

 

.தி.மு.க. மூன்று அணிகளாக உடைந்திருப்பதை உவமைக்கதையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டிக்காட்ட, "'உடைந்த முட்டை' அ.தி.மு.க. இல்லை காங்கிரஸ் கட்சிதான்" என அமைச்சர்கள் பதில் கொடுத்த சுவாரஸ்ய நிகழ்வு சட்டசபையில் நேற்று நிகழ்ந்தது.

தமிழக சட்டசபையின் மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றும் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை மானியகோரிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, "ஒரு சிறுவனிடம் அவனுடைய அம்மா. செட்டியார் கடைக்குப்போய் முட்டை வாங்கிவரச் சொன்னார். சிறுவனும் கடைக்குச் சென்று முட்டையை வாங்கிக்கொண்டு, வேகமாக வீட்டிற்கு ஓடிவந்தான். அவன் வந்த பாதை பள்ளம்மேடாக இருந்ததால், சிறுவன் கையிலிருந்த முட்டை தவறி கீழே விழுந்துவிட்டது. இதனால், முட்டையிலிருந்த வெள்ளைக் கரு,கே.ஆர்.ராமசாமி மஞ்சள் கரு இரண்டும் தனித்தனியாக சிதறிவிட்டது. முட்டையை தவறவிட்ட சிறுவன், அதை கையில் எடுக்க முயன்றான். அது முடியாமல் போகவே, வீட்டிற்குச்சென்று தன் அம்மாவிடம் 'முட்டை உடைந்துவிட்டது. நான் முட்டையின் வெள்ளைக்கருவையும், மஞ்சள் கருவையும் ஒட்டவைக்கப் பார்த்தேன். முடியவில்லையம்மா' என்று சொன்னான். அவனுடைய அம்மா, 'உடைந்த முட்டையின் கருவை ஒட்டவைக்க முடியாது. உடைந்தது உடைந்ததுதான்' என்று பதில் கொடுத்தார். இந்தக் கதைபோலத்தான் உடைந்ததை ஒட்டவைக்க முடியாது என்பதை இந்த அவைக்குச் சொல்லிக்கொள்கிறேன் என்று அ.தி.மு.க. உடைந்து கிடப்பதை உவமைக்கதையாக சொல்லி முடித்தார்.

ராமசாமியின் கதைக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ராமசாமி பேசி முடித்ததும் எழுந்த அமைச்சர் தங்கமணி, "உடைந்த முட்டை நாங்கள் அல்ல; நீங்கள் தான். உங்கள்கட்சியில்தான் பல கோஷ்டிகள் உள்ளன. அதை ஒட்டவைக்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்" என்றார். அதன்பிறகு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எழுந்து,“உங்கள் கட்சியிலிருந்துதான் த.மா.கா. பிரிந்துபோய் உள்ளது. அப்படியென்றால் உடைந்த முட்டை காங்கிரஸ் கட்சியா?” என்றார். இவர்கள் இருவரின் பதிலிலும் திருப்தி அடையாத அவை முன்னவர் செங்கோட்டையன், "காங்கிரஸ் கட்சிதான் உடைந்த முட்டையாக அகில இந்திய அளவில் இருக்கிறது. அதனால்தான் அந்தக்கட்சியால் எழும்பவே முடியாமல் உள்ளது" என்றார்.

உடைந்த முட்டை கதையை வைத்து சட்டசபையில் நடந்த இந்த விவாதம் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close