Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்னையை அரசியல் ஆக்குகின்றனர்!'' - கிரண்பேடி

கிரண்பேடி

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கிரண்பேடி, மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், 'நியமன சட்டமன்ற உறுப்பினர் பிரச்னையை அரசியல் ஆக்குகின்றனர்'' என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சென்னையில் பேட்டியளித்தார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது, ''புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் நன்மைக்காகச் சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறேன். மத்திய அரசின் உத்தரவின்பேரில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் நடைபெற்றது. நியமன சட்டமன்ற உறுப்பினர் பிரச்னையை அரசியல் ஆக்க முயற்சி செய்கின்றனர். புதுச்சேரி தலைமைச் செயலாளர் அரசுக்கும், கவர்னருக்கும் பாலமாக இருக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் சுகாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, தேவை இல்லாத நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close