Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''தியேட்டர்களில் நொறுக்குத்தீனி கொள்ளைக்குச் சட்டப்படி தீர்வு!''  - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

''தியேட்டர்களில், நொறுக்குத்தீனி கொள்ளைக்குச் சட்டப்படி தீர்வு காணப்படும்'' என பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தியேட்டர்களில் விற்பனைசெய்யப்படும் நொறுக்குத் தீனிகள் மற்றும் குளிர்பானங்கள், பல மடங்கு அதிக விலை நிர்ணயித்து விற்கப்படுகின்றன. பல தியேட்டர்கள், சொந்தமாக இணையதளம் வைத்துக்கொண்டு, டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்கின்றன. இந்தச் சேவைக்கு 10 பைசாகூடச் செலவாகாது என்றாலும், முன்பதிவுக் கட்டணமாக ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறாகப் பல வழிகளில் ரசிகர்களின் பணத்தைப் பிடுங்கும் தியேட்டர்கள், இப்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதைச் சகிக்க முடியாது. தியேட்டர்களின் கொள்ளையைக் கண்டுகொள்ளாத அரசு, இப்போது கட்டணக் கொள்ளையையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தான் பேரம் பேசப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. தமிழக அரசு உடனடியாகக் கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும்; தியேட்டர்களும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அதுமட்டுமன்றி, தியேட்டர்களில் நொறுக்குத்தீனிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும் அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தக் கொள்ளைக்கு சட்டப்படியாகத் தீர்வு காணப்படும்'' என அதில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close