Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரோலில் பேரறிவாளன் விடுவிக்கப்படுவாரா? சட்டப்பேரவையில் முதல்வர் பதில்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், பரோலில் விடுவிக்கப்படுவாரா என்று, தி.மு.க. எம்எல்ஏ., அன்பழகனின் கேள்விக்கு, முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க உறுப்பினர் ஜெ.அன்பழகன், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதுகுறித்து தலைமை வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேரறிவாளனை பரோலில் விடுவிப்பதுகுறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதைத் தெடர்ந்து, காவல்துறையில் 54 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுப் பேசுகையில், "சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரைத் தண்டிக்க ரூ.6.42 கோடியில் மின்ரசீது முறை அமல்படுத்தப்படும். 100 காவல் நிலைங்களில் ரூ.2.50 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ரூ.50 லட்சம் செலவில் கையடக்க ஜாமர் சாதனம் வாங்கப்படும். ரூ.35 லட்சம் செலவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் 2 கருவிகள் வாங்கப்படும். ரூ.19 லட்சம் செலவில், அதிரடிப்படை வீரர்களுக்கான குண்டு துளைக்காத 2 பொதியுறைகள் வாங்கப்படும். தமிழ்நாடு காவல்துறையினருக்காக சைபர் அரங்கம் ரூ.3.71 கோடியில் உருவாக்கப்படும். 100 காவல் நிலையங்களில், ரூ.2.50 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பெட்ரோலியப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான கருவி, ரூ.50 லட்சத்தில் வாங்கப்படும்.

வீரதீரச் செயலுக்காக பதக்கம் பெறும் காவலர்களுக்கான பணப்படி ரூ.300-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்படும். காவலர் பதக்கம் பெற்றவர்களுக்கான மாதாந்திர பதக்கப்படி, ரூ.200-லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படும். காவலர்களின் மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் வெகுமதியுடன் கூடிய ரொக்கத்தொகை அதிகரிக்கப்படும். ரொக்கத்தொகை டிஎஸ்பி-க்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். சார்பு ஆய்வாளர் முதல், காவல் ஆய்வாளருக்கான தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். 2-ம் நிலைக் காவலர் முதல், தலைமைக் காவலருக்கான தொகை ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்படும். தொழில்நுட்ப சிறப்புச்சேவையில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கான பரிசுத்தொகையும் உயர்த்தப்படுகிறது. இனம் 1ல் உள்ளோர் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமும், இனம் 2ல் உள்ளோர் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும். இனம் 3ல் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close