Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் இந்த இடங்களில் தான் மோனோ ரயில்!

சென்னையில் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள மோனோ ரயில் வழித்தடத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னையில் மோனோ ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார். அதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பல மாநிலங்களில் மோனோ ரயில் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின. ஆனாலும், மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மோனோ ரயில் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசு கொள்கை விளக்கக் குறிப்பொன்றைத் தாக்கல்செய்துள்ளது. அதில், சென்னையில் 6 ஆயிரத்து 402 கோடி ரூபாய் செலவில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும், பொதுப் போக்குவரத்தை உயர்த்த, மோனோ  ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில், 43.48 கி.மீட்டருக்கு இரு வழித்தடங்களில் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், முதல் வழித்தடம் பூந்தமல்லி- கத்திரப்பாரா, போரூர்- வடபழனி இடையே ரூ.3,267 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும், 2-வது வழித்தடம் வண்டலூர்- வேளச்சேரி இடையே ரூ.3,135 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close