Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை


ஆந்திர கடற்கரையோரங்களில், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறு, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று, தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்துவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாலை நேரங்களில் சென்னையின் மத்திய நகர்ப் பகுதியிலும் புறநகர்ப் பகுதிகளிலும் மிதமான மழைப் பொழிவிற்கான வாய்ப்பு உள்ளதாக, நுங்கம்பாக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close