Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கறுப்புக்கொடி: கன்னியாகுமரியில் 13 பேர் கைது


ஆர்.எஸ்.எஸ்.-ன் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத், ஐந்து நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்துள்ளார். அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவித்தவர்களை போலீஸார் முன்னெச்சரிக்கையாகக் கைதுசெய்துள்ளனர். சீதாராம் சுவாமிஜியின் 'பாரத பரிக்கிரம பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சி' நாளை நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் சிறப்புரையாற்றுகிறார்.

சிறப்பு விருந்தினர்களாக, அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலேவும் , மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், திரைப்பட இயக்குநர் விசு மற்றும் கவிஞர் பிறைசூடன் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் வந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத்துக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவித்த  கம்யூனிஸ்ட் லெலினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அந்தோணிமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர் சுசீலா ,டென்னிஸ், திராவிட கழகத்தைச் சேர்ந்த நிதி அரசன், த.மு.மு.க-வைச் சேர்ந்த ஜஸ்டின் முகமது உட்பட  ஐந்து  பேரை இன்று கைதுசெய்தனர். இது தவிர, சி.பி.எம்.எல். ரெட் ஸ்டார் கட்சியின் சார்பாக, மாட்டு இறைச்சித் தடை சட்டத்தைத் திரும்பப் பெற கேட்டு, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மாவட்டச் செயலாளர் பால்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எட்டுப் பேரையும் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்துள்ளனர். இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குமரிமாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close