Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கீழடி அகழாய்வைக் கண்டுபிடித்ததே பள்ளி மாணவர்கள்தான்': ரகசியத்தை உடைக்கும் ஆசிரியர்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், 1974, 82-ம் ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் தற்செயலாகக் கண்டெடுத்துக்கொடுத்த தொல்லியல் பொருள்கள் மூலமாகத்தான், மத்திய அரசுமூலம் இன்று பெரிய அளவில் அகழாய்வு நடைபெறுகிறது என கீழடி அகழாய்வின் முன்னோடியும் ஓய்வுபெற்ற வரலாற்று ஆசிரியருமான வை.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.


மாணவர்களிடையே தமிழர்களின் தொன்மைகுறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் தொடங்க, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தொடங்கிவைத்தார். இதற்கான தொடக்கவிழா, சிவகங்கை வியானி மையத்தில் நடைபெற்றது. வை.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார், 

முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பேசும்போது... "தமிழர் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனைத் தொடர்ந்து, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் பெயரளவில் இல்லாமல் கள ஆய்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்விழா நடைபெறுகிறது. பழங்காலப் பொருள்களான நாணயங்கள், தொல்லியல் பொருள்கள், கல்வெட்டுகள் கிடைத்தால், அதனைச் சிதைக்காமல் ஆசிரியர்களிடம் கொடுத்து, ஆவணப்படுத்த வேண்டும். அவற்றைக்கொண்டு காட்சியகம் அமைக்க வேண்டும் . இதன்மூலம் அடுத்தத் தலைமுறையினருக்கு நமது தொன்மையைக் கொண்டுசெல்ல முடியும்'' என்றார்.


                    

வை.பாலசுப்பிரமணியன் பேசும் போது... 1974-82-ம் ஆண்டுகளில் கீழடியில் நான் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியபோது என்னிடம் படித்த பள்ளி மாணவர்கள், தற்செயலாகக் கண்டெடுத்துக்கொடுத்த தொல்லியல் பொருள்கள் மூலமாகத்தான் இன்று மத்திய அரசுமூலம் பெரிய அளவில் அங்கு அகழாய்வு நடைபெறுகிறது. வரலாறு மற்றும் தொன்மையைப் பாதுகாப்பதில் நாம் பின்தங்கியுள்ளோம். கிடைத்த பழங்காலப் பொருள்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்தத் தவறிவிட்டோம். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும், நகர நாகரீகம்,பண்பாடு கலாச்சாரத்திற்கான அனைத்துச் சான்றுகளும் கீழடி அகழாய்வில் கிடைப்பதால்தான், தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வு ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது. இங்கு, தொடரும் ஆய்வு மூலம் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்றார்.

 இந்த நிகழ்ச்சியின்போது 150 உயர்நிலை, மேனிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புஉணர்வு அளிக்கப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close