Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிமன்ற செலவுகள் அனைத்தும் திருப்பி தரப்படும்! அடடே நீதி மன்றம்!

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயம்கொண்டம் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலக்) இன்று தொடங்கியது. அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட நீதிபதி ரகுமான் மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

இதில் அரியலூர் மற்றும் ஜெயம்கொண்டம் நீதிமன்றங்களில் மட்டும் 9,939 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வங்கி வழக்குகள், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள், சிறுகுற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மொத்தம் 4 சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விழாவில் பேசிய மாவட்ட நீதிபதி ரகுமான், "நீதிமன்றங்களில் நீண்டகாலமாக தேங்கி உள்ள பழைய வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இருதரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்படக்கூடிய பகை தவிர்க்கப்படுகிறது. இதில் தீர்த்துவைக்கப்படும் வழக்குகள் எந்தவித மேல்முறையீடும் செய்ய இயலாது. இதில் தீர்வு காணப்படும் வழக்கிற்காக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்காக செலவு செய்த பணம் அனைத்தும் திருப்பி தரப்படும்" என்று கூறினார்.

நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு)தனசேகரன், அரியலூர் மாவட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close