Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கதிராமங்கலத்தைவிட்டு காவல்துறை வெளியேற வழக்கு போடுவேன்'... எச்சரித்த டிராபிக் ராமசாமி!

கதிராமங்கலத்தைவிட்டு காவல்துறை வெளியேற வேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

 


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேரடியாக சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஓஎன்ஜிசி குழாய் வெடித்து சிதறியதில் எண்ணெய் படர்ந்து விவசாயம் செய்ய முடியாமலும், குடிதண்ணீரில் எண்ணெய் படர்ந்துள்ளதால் குடிதண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்லும் கதிராமங்கலம் மக்களை நேரில் சந்தித்தார். ஒன்றாக கூடியிருந்த மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த மக்களிடம், ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தியது குறித்து விசாரித்தார். பெண்கள் தங்கள் போராட்டக் களத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்களை ஒவ்வொருவராக எழுந்து நின்று தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அப்பகுதியில் மூன்று ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வந்த நிலம் முழுவதும் கச்சா எண்ணெய் படர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்படைந்துள்ள ஸ்ரீராமிடம் விவரங்கள் கேட்டவர், ஆறுதல் கூறி சட்ட ரீதியாக அனுகவோம் என்று அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், "கதிராமங்கலம் மக்களின் கருத்துக்களை கேட்காமலே ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் குழாய் அமைத்திருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு ஏதும் வழங்கவில்லை, அவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், ஓஎன்ஜிசி நிறுவனத்தை கதிராமங்கலத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென கதிராமங்கலம் மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து வாதாட உள்ளேன். மேலும், கதிராமங்கலம் மக்கள் தங்களுடைய ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர்.  நான் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர்கள் ஒப்படைக்க முன்வரவில்லை. ஏனென்றால், ஆதார் அடையாள அட்டையை ஒப்படைத்தாலும் இந்த அரசு எதையும் கண்டுகொள்ளப் போவதில்லை. போராட்டத்தில்  ஈடுபட்டு 10 பேரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை பார்க்க குடும்ப உறுப்பினர்களைகூட அனுமதிக்கவில்லை. இது எந்தவிதத்தில் நியாயம்? என கொந்தளித்தவர். அனுமதி அளிக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்  என்றார்.  
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close