Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”புதுச்சேரியை கலவர பூமியாக மாற்ற நினைக்கிறார் கிரண்பேடி” – அதிமுக ’அம்மா’ அணி சாடல்

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை இல்லாமல் பாஜக நிர்வாகிகள் மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது மத்திய அரசு. இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், “இன்று நடந்த பந்த்திற்குக் காரணமான அரசியல் கட்சியினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” என்று அதிமுக ’அம்மா’ அணியைச் சேர்ந்தவரும், புதுச்சேரி அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.

anbazhagan

 

“மூன்று நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக நடைபெறும் போராட்டத்தில் அரசே நேரடியாகக் களத்தில் இறங்கியிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு நேர் விரோதமாக பந்த் போராட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்து பேருந்துகள் செல்லக்கூடாது என ஆட்சியாளர்கள் வாழ்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். உருவ பொம்மை எரிப்பு, சாலை மறியல் என அனைத்தும் அரங்கேறுகின்றன. இதன் மூலம் ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு தொல்லைகளையும் தொந்தரவுகளையும் கொடுத்துள்ளனர்.

அதனால் இதற்கு காரணமான அரசியல் கட்சியினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியை கலவர பூமியாக மாற்றுவதற்கான செயல்பாடுகளைச் செய்கிறார். முதல்வர் நாராயணசாமி இந்த விவகாரத்தில் இரட்டை வேஷம் போடுகிறார். மத்திய அரசின் எந்தச் செயல்பாடுகளையும் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் இதுவரை கண்டிக்கவில்லை. இந்த பந்த் போராட்டத்தினால் எந்த ஒரு பலனும் ஏற்படப் போவது இல்லை. மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த பந்த் தேவையற்ற ஒன்று” என்றார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை இல்லாமல் பாஜக நிர்வாகிகள் மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது மத்திய அரசு. இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close