Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சைபர் க்ரைமுக்கு சவால் விட்ட 'இணையதள திருட்டு'... சென்னை மென்பொறியாளர் சிக்கிய பின்னணி!

பிரபல நாளிதழ்கள், வார இதழ்களின் செய்திகள், எக்ஸ்குளுசிவ் கட்டுரைகள், புகைப்படங்கள் ஆகியவை எந்தவித மாற்றங்களுமில்லாமல் இன்னொரு செய்தி இணையத்தளத்தில் வெளியாகின. இது, சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில் ஊடகத்துறையினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த இன்ஜீனியர் ஆனந்த், இந்த சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர். 
 

techie arrested over steeling magazines

யார் இந்த ஆனந்த்...?

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல மருத்துவரின் மகன் ஆனந்த். இவர், சென்னையில் உள்ள தனியார் இன்ஜீனியரிங் கல்லூரியில் படித்துவிட்டு பிரபல ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றினார். சென்னையிலிருந்து அவரை புனேக்கு இடம் மாற்றியதும் வேலையை உதறித் தள்ளினார் ஆனந்த். இதன்பிறகு வெப் சைட்களை வடிவமைத்து கொடுக்கும் பணியை ஆனந்த்  மேற்கொண்டார். இதில் லட்சக்கணக்கில் சம்பாதித்து 23 வயதிலேயே பணக்காரனார் அவர். ஆனந்தின் கம்ப்யூட்டர் அறிவே, அவரை இன்று அழிவுப்பாதைக்குச் அழைத்துச் சென்றுள்ளது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள அவரது குடும்பத்துக்கு ஆனந்தால் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

ஆனந்த் சிக்கியது எப்படி...?

ஊடகத்துறையினரின் புகாரின் பேரில் சென்னை பைசர் கிரைம் போலீஸார், விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, மேக்னட் டாட் காம் என்ற இணையத்தளத்தில் முன்னணி செய்தி நிறுவனங்களின் செய்திகள் அப்படியே வாட்டர் மார்க்குவுடன் வெளியாகியிருந்தன. இந்த இணையத்தளத்தின் முகவரி, அதை நடத்துபவர் யார் என்ற விசாரணையில் போலீஸார் களமிறங்கினார்.   அப்போது, இன்னொரு செய்தி நிறுவனத்தின் செய்திகளை காப்பியடித்த மேக்னெட் டாட் காமிற்கு வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் தூத்துக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி அக்கவுன்ட்டில் வரவு வைக்கப்பட்ட விவரம் போலீஸாருக்குதெரிந்தது. 
 அந்த அக்கவுன்ட் ஆனந்த் பெயரில் இருந்தது. அதில் லட்சக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்பட்டதற்கான கணக்கைப் பார்த்து போலீஸார் கதிகலங்கினர். மேலும், மேக்னெட் டாட் காம் இணையத்தளத்தின் வாடிக்கையாளர்களுக்கு ஆனந்தின் இமெயிலில் இருந்தே யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதை வைத்தே ஆனந்த்தை போலீஸார், காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
 

anand it

ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்ட நபர்... 

ஆனந்திடம் போலீஸார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஐ.டி நிறுவனத்தின் வேலையை உதறித்தள்ளிய ஆனந்த், யார் கேட்டாலும் இணையத்தளத்தை கிரியேட் செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டார். அப்போது, ஸ்கைப் மூலம் ஆனந்த்தை தமிழ் பேசும் நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், ஆனந்திடம் ஒரு செய்தி இணையத்தளத்தை கிரியேட் செய்துதரும்படி கேட்டதாக போலீஸாரிடம் ஆனந்த் தெரிவித்துள்ளார். அதற்குரிய தொகையை பெற்ற ஆனந்த், இணையத்தளத்தை கிரியேட் செய்து கொடுத்துள்ளார். இதன்பிறகு அந்த இணையத்தளத்தின் மூலம் செய்திகள் களவாடப்பட்டன. அதன்மூலம் லட்சக்கணக்கான ரூபாய் கிடைக்கத் தொடங்கின. அந்தபணமும் ஆனந்தின் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டன.  

மேக்னெட் டாட் காம் என்ற பெயரில் இணையத்தில் செய்திகளைத் திருடி லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்தது அந்த டாட் காம். இதற்காக முன்னணி நிறுவனங்களின் யூஸர் ஐ டியைப் பயன்படுத்தி அங்குள்ள செய்திகளை டவுன்லோடு செய்து அதை அப்படியே மேக்னெட் டாட்காமில் பதிவேற்றியுள்ளனர். அடுத்து, பிரபல நிறுவனங்கள் தங்களுடைய இணையத்தளத்தில் செய்திகளை பதிவேற்றும் போதே இந்த மேக்னெட் இணையத்தளமும் செய்திகள், புகைப்படங்களைத் திருடி தங்களுடைய வெப் சைட்டில் பதிவேற்றியுள்ளனர்.  

இதுகுறித்து பேசிய சைபர் க்ரைம் ஆய்வாளர் அன்பரசன், 'ஊடகத்தினர் கொடுத்த புகாரையடுத்து, சைபர் கிரைம் குற்றவாளி ஆனந்த்தை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். ஆனந்த் தெரிவித்த தகவலின்படி இந்த சம்பவத்தின் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், மேக்னட் டாட் காமில் செய்திகளைப் பதிவேற்றம் செய்த ஐ.பி அட்ரஸ் வெளிநாட்டைச் சேர்ந்தது. அந்த நபர் யார் என்று விசாரித்து வருகிறோம் என்றார்.

சைபர் க்ரைம்

 ஹேக்கர்ஸ் கும்பலின் சதியா...

சைபர் கிரைம் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், மேக்னட் டாட் காம் போல பல டூபாக்கூர் வெப்சைட்கள் உள்ளன. இன்னொருவரின் செய்திகள், புகைப்படங்களைத் திருடி தங்களது வெப்சைட்டில் பதிவு செய்வதே வேலையாக உள்ளது. திருட்டு விசிடி போலத்தான் இதுவும் ஒரு சைபர் மோசடி. மேக்னட் டாட் காமில் உள்ள செய்திகளை நாங்கள் ஆய்வு செய்தபோது, அந்த செய்திகள், புகைப்படங்களின் காப்பி ரைட் பெற்றவர்களுக்குத் தெரியாமல் திருடி பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தேவையான கம்ப்யூட்டர் மூளையாக  செயல்பட்ட அந்த சைபர் கிரைம் குற்றவாளி குறித்த தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. ஹேக்கர்ஸ் கும்பல் உதவியுடன் செய்திகள் திருடப்பட்டதாகவும் எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த கும்பல் வெளிநாட்டில் உள்ள ஐ.பி. அட்ரஸைப் பயன்படுத்தி இந்த சைபர் கிரைமில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஐ.பி. அட்ரஸ் விவரங்களைப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றனர். 

மேலும் ஆனந்தின் கம்ப்யூட்டர் அறிவைக் கண்டு  சைபர் க்ரைம் போலீஸாரே  அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் வெளிநாடுகளிலிருந்து அவருக்கு இணையத்தளத்தை கிரியேட் மற்றும் டிசைன் செய்ய ஆர்டர்கள் குவிந்துள்ளன. இந்த சிறுவயதில் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து விளையாடுகிறார். மேக்னட் டாட் காமிற்கும் தனக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று போலீஸாரிடம் ஆனந்த சொல்லியுள்ளார். ஆனால், மேக்னட் டாட் காமை வடிவமைத்துக் கொடுத்தற்கான ஆதாரங்களும், அந்த டாட் காம் மூலம் அவருக்கு வருமானம் கிடைத்ததற்கான ஆதாரங்கள் போலீஸாரின் கையில் உள்ளது. இதனால், ஆனந்த் வசமாக சிக்கிவிட்டார். அவரை காப்புரிமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். என்கின்றனர் சைபர் கிரைம் போலீஸார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close