Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூவத்துக்கு விடிவு பிறக்கிறதா..?: தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு!

கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, அழகுபடுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

கூவம்

‘கூவம்’ என்றாலே சாக்கடை, அழுக்கின் அடையாளச் சொல் என்ற நிலை இருக்கிறது. ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் 1950-ம் ஆண்டுக்கு முன்னர் படகு போக்குவரத்துக்கும், மக்கள் மீன் பிடித்து உண்ணும் தலமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைமிகு கூவம், மனிதத் தவறுகளால் இன்றைக்கு மரணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ‘சென்னையின் பெருமைகளில் ஒன்றான கூவம் நதியை உயிர்ப்பிக்கும் நோக்கில், கூவம் தொடங்கும் இடத்தில் இருந்து, முடியும் இடம் வரை சுமார் 16 கி.மீ. தொலைவுக்கு தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள தமிழக அரசு 2012-ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை வடிவமைத்தது. 

இத்திட்டத்தின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கான குறுகிய கால திட்டம், நான்கு முதல் எட்டு ஆண்டுகள் வரையுள்ள திட்டம், எட்டு ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காலத்திட்டம் என மூன்று கட்டங்களாக தூய்மைப்பணி திட்டமிடப்பட்டது. இதில் குறுகிய காலத்திட்டத்துக்கு முதல் அனுமதியை அளித்துள்ளது மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம்.

முதற்கட்டமாக கடலை ஒட்டிய முகத்துவாரம் முதல் சேத்துப்பட்டு வரையில் பணிகள் தொடங்க உள்ளன. சென்னையின் ஆறுகளை மீட்கும் அறக்கட்டளையின் சார்பில் தூர்வாருதல், கரையோரங்களில் பூங்கா அமைத்தல் ஆகிய பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close