Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளின் இதயங்களைக் காப்பாற்ற திருச்சி போலீஸாரின் புதிய முயற்சி!

திருச்சி மாநகரக் காவல் ஆணையரான அருண், திருச்சி மாநகரில் அடுத்தடுத்த அதிரடிகளைச் செய்துவருகின்றார். கடந்த சில நாள்களுக்கு முன், திருச்சி மாநகரைக் கலக்கிவந்த கள்ள லாட்டரி கும்பலையும், பல மாதங்களாக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக உலாவந்த, கள்ள லாட்டரி அதிபர் எஸ்.வி.ஆர். மனோகரையும் கைதுசெய்தார். மனோகரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்தார். அதேபோல 'போலீஸாரின் சொந்த வாகனங்களில், 'போலீஸ்' என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளக்கூடாது' என்று உத்தரவு போட்டார்.  

Trichy Police Commissioner Arun

இப்படி, அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளைப் போடும் திருச்சி மாநகர கமிஷனர் அருண், அடுத்தகட்டமாக திருச்சியில் உள்ள குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டு, அதற்கான செயல்பாடுகளிலும் இறங்கியுள்ளார்.

அதன்படி திருச்சி மாநகரக் காவல்துறையும் திருப்பூரில் இயங்கிவரும் காமன் இந்தியா எனும் தன்னார்வ அமைப்பு, திருச்சி அரிமா சங்கங்களான ராக் டவுன், பிரீமியர், அரிஸ்டோகிராட்  உள்ளிட்ட மூன்று சங்கங்கள், சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து, திருச்சி மத்தியப்  பேருந்து நிலையம் அருகில் உள்ள திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் குழந்தைகளுக்கான மாபெரும் இலவச இதய சிகிச்சை முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தார்.

Trichy Police Commissioner Arun

இதன் தொடக்க விழாவில், 'காமன் இந்தியா' அமைப்பின் தலைவர் சேஷாத்திரி, அந்த அமைப்பின் திட்ட இயக்குநர் சுந்தரமூர்த்தி ஆகியோர், மருத்துவ முகாம் சம்பந்தமாக விளக்கினார்கள். அடுத்து, சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவர்களான நேவில் சாலமன், முத்துக்குமார், அனுராதா ஸ்ரீதர் மற்றும் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்டோர், குழந்தைகளுக்கான நோய் பற்றியும், அதன் சிகிச்சை பற்றியும் விளக்கினார்கள். நிகழ்ச்சியில், “இதயம் காப்போம்” குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை முகாமை திருச்சியில் நடத்தக் காரணமான, மாநகரக் காவல் ஆணையர் அருண், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, முகாமைத் தொடக்கிவைத்தார். 

Trichy Police Commissioner Arun

 இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 178 பேர், பொது மருத்துவப் பரிசோதனைசெய்தவர்கள் 152 பேர் என 330 குழந்தைகள் கலந்துகொண்டனர். அதில், 84 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருப்பது, இந்த முகாமில் கண்டறியப்பட்டது. இந்த முகாமில் பிறந்த  எட்டு  மாத குழந்தை ஒன்றைப் பரிசோதனைக்கு அழைத்திருந்தனர். பரிசோதனையில், இதயத்தில் பிரச்னை உள்ள நபர்களை வரும், 12 மற்றும் 17 தேதிகளில் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, மேல் சிகிச்சை செய்ய உள்ளது” என திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

வழக்கமாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ, மாவட்ட ஆட்சியரோ, தனியார் மருத்துவமனைகளோதான் மருத்துவ முகாம்களை நடத்துவார்கள். ஆனால், திருச்சி காவல்துறைமூலம் நடத்தப்பட்ட இந்த 'இதயம் காப்போம்' -குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை முகாம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close