Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணீருக்காகப் போராட்டம் நடத்திய மதுசூதனன் திடீர் கைது!

Madhusudhanan

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யாததைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய மதுசூதனன் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிநீருக்காகத் தங்கள் உயிரைப் பணயம்வைத்து நெடுஞ்சாலைகளைக் கடந்தும், பல அடி ஆழக் கிணறுகளில் இறங்கியும் தண்ணீர் எடுத்து வருகின்றனர். தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையால் மக்கள் கொந்தளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருதுகணேஷ் தலைமையில் தி.மு.க-வினர் அங்குள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ,அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

r.k.nagar

இந்தநிலையில், ஆர்.கே.நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 150 பேர் இன்று தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close