Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசை அனுமதிக்க முடியாது! - உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்கு தமிழக அரசை அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 


முல்லைப் பெரியாறு அணையையும் அந்தச் அணைக்குச் செல்லும் எல்லக்கடவு சாலையையும் பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இன்று இதற்கு கேரள அரசு பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், 'முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்கும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தமிழக அரசை அனுமதிக்க முடியாது.

மேலும் முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் வல்லக்கடவு சாலையில் பராமரிப்பு உரிமை கோருவதற்கு தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. வல்லக் கடவு சாலை அமைந்திருக்கும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. அந்தச் சாலையில் இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க முடியாது. கனரக வாகனங்கள் செல்ல வேண்டுமென்றால் மத்திய அரசிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும். இதுகுறித்து தெரியாமல் சாலையை பராமரிக்க தமிழக அரசு உரிமை கோரியுள்ளது. எனவே தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்' என்று பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close