Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லஸ்கர் இ தொய்பாவில் இருந்த இந்து தீவிரவாதி கைது

ஷ்கர் இ தொய்பாவில் இணைந்து செயல்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஸ்கர் இ தொய்பாவில் இந்து தீவிரவாதி

காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் பஷீர் லஷ்கரி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். அவர் பதுங்கியிருந்த அதே வீட்டில் சந்தீப் குமார் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்து மதத்தைச் சேர்ந்த சந்தீப் குமார், லஷ்கர் இ தொய்பாவில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இவர், உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகரைச் சேர்ந்தவர்.

காஷ்மீர் ஐ.ஜி முனீர்கான், கடந்த மாதம் ஆன்ச்பால் பகுதியில் ஆறு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தீப் குமாருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தெற்கு காஷ்மீரில் சந்தீப் குமார் மீது வங்கியில் கொள்ளையடித்தது, மற்றும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உளளன. ஜூன் 17-ம் தேதி ஆன்ச்பால் பகுதியில் 6 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பஷீர் லஷ்கரி இருந்ததாகப் போலீஸ் குற்றம்சாட்டிய நிலையில்,  ஜூலை 1-ம் தேதி பாதுகாப்புப் படையினர் அவரைச் சுட்டுக் கொன்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close