Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 6,350 எம்.பி.பி.எஸ் சீட்: ஆன்லைன் விண்ணப்பக் குளறுபடிகளால் சிக்கல்!


எம்பிபிஎஸ்  மருத்துவர்

 

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தமிழக அரசு செய்கிறது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் தேசிய அளவிலான 15 சதவிகித ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்த ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க தொழில்நுட்பப் பிரச்னைகள் எழுந்தது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் சீட் ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பத்தின்போது இந்தப் பிரச்னை வராமல் பார்த்துக்கொள்வோம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.


ஆனால், கடந்த 5-ம் தேதி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள  6,350 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான விண்ணப்பம் வழங்குதல் தொடங்கியது. அப்போது ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதில் சிக்கல் எழுந்தது. http://www.mcc.nic.in/ என்ற இணையதளத்துக்குள் சென்று நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பிரிவில் விண்ணப்பிக்கும்போது http://www.mcc.nic.in/MCCUG_dem/New-Registration என்ற கட்டத்தைத் தாண்ட முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து டெல்லியில் சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ’தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது உண்மைதான். இதுபற்றி ஏராளமான புகார்கள் வருகின்றன’ என்று சொல்லிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்தார்கள். 


நீட் தேர்வு குளறுபடிகளைத் தாண்டி, அதில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு இப்போது எம்.பி.பி.எஸ் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிகர்நிலைப் பல்கலைக் கழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 11-ம் தேதி மதியம் 12 மணி, கடைசி நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும் ஆன்லைன் விண்ணப்பம் தொழில்நுட்பக் கோளாறுகளை உடனே சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close