Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருநங்கைகளுக்காக புதிய அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு!

’அரசு ஊழியர்  மற்றும் ஓய்வூதியர்களுக்குத் திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர். குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு’ என்று தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. 

transgenders
 

தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி(GO Ms No.180 Finance ) ’அரசு ஊழியர்களின் திருநங்கை குழந்தைகள் பெண் குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். அரசு ஊழியர்கள் பணியில் இருந்து மரணமடைந்தால் அவர்களின் திருநங்கை குழந்தை பெண் குழந்தையாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்குப் பெண் குழந்தைகளுக்கு வழங்கும் சலுகைகள் வழங்கப்படும். அக்குழந்தைகள் 25 வயதுவரை  குடும்ப ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். இந்த அரசாணை திருநங்கைகளின் வாழ்நாளில் ஒரு முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. 


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close