Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமர்நாத்துக்கு புனித யாத்திரை சென்ற பயணிகளின்மீது தீவிரவாதிகள்  கடும் தாக்குதல்: 7 பேர் பலி

அமர்நாத்துக்கு புனித யாத்திரை சென்ற பயணிகள்மீது தீவிரவாதிகளின் கடும் தாக்குதலில், 7 பேர் பலி உயிரிழந்தனர் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமரநாத்

காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதியின் நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அன்று முதல் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், புகழ்பெற்ற பனிலிங்க தரிசன அமர்நாத் யாத்திரையும் தடைசெய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான பனிலிங்க தரிசன அமர்நாத் யாத்திரை, ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. முதல் குழுவாக 4,000 பேர் சென்றனர். பின்னர்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்கலாம் என்ற உளவுத்துறைத் தகவலையடுத்து, இந்தப் பயணம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியின் அருகே, அமர்நாத் யாத்திரைக்காக பக்தர்கள்  சென்ற  பேருந்தைக் குறிவைத்து காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கோர சம்பவத்தில் 7 பயணிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளைத் தேடும் பணி நடந்துவருகிறது. இந்தத் தாக்குதலை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்து, பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close