Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலெக்டர் தலைமையில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி!

கரூரில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு ஜூலை 10 முதல் 15-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு, திறன் வார விழா அனுசரிக்கப்படுகிறது. முதல் நாளான நேற்று, தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

Govindraj

 

கரூர் அரசுக் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கில், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியதாவது,
"மனிதப் பிறவியாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அந்த உள்ளார்ந்த திறனை அறிந்து, அதுகுறித்த தெளிந்த அறிவு ஈடுபாடுகொள்ள வேண்டும். இதற்காக, தமிழக அரசு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிவருகிறது. இந்த வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்தி, எதிர்காலத்தை வளமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புப் பயிற்சித்துறை வாயிலாக பல்வேறு தொழில்திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுதவிர, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக, பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. இந்தப் பயிற்சி வாய்ப்புகளைப் படித்த இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்தி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திறன் வார விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெற்ற விழிப்புஉணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். 
 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மேம்பாட்டு இயக்கத் திட்ட அலுவலர் பாலகணேஷ், தாந்தோணி அரசுக் கலைக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், தொழிலதிபர் ராஜூ, வேலைவாய்ப்புப் பயிற்சித்துறை உதவி இயக்குநர் முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close