Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவப் பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு சென்னை திரும்பினார். 

ரஜினி


நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'காலா' படத்தில் நடித்துவருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், அமெரிக்காவுக்கு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றார். அங்கு, அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த வாரம் ரஜினிகாந்த் கேசினோவில் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

அமெரிக்காவில், ரசிகர் ஒருவருடன் ஜாலியாக காரில் பயணம்செய்யும் செல்ஃபி வீடியோ ஒன்றும் வைரல் ஆனது. இந்நிலையில், தனது மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, நேற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். விரைவில் அவர் 'காலா' படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close