Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல் குவாரியைத் தொடர்ந்து போரூர் ஏரி... அரசின் அடுத்த பிளான்!

சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சத்தை குறைக்க போரூர் ஏரியிலுள்ள நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.

Porur Water
 

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம், மிகக் குறைந்த மழைப் பொழிவு காரணமாக முற்றிலும் வறண்டுவிட்டது. இதனால், பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறையாதவாறு தொடர்ந்து வழங்கிட கூடுதல் நீர் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வந்தன. போரூர் ஏரியிலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கிட ஏரி நீரின் தரம் சென்னை குடிநீர் வாரியம், கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் உள்ளிட்ட பரிசோதனை நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டது. இப்பரிசோதனைகளில் உரிய சுத்திகரிப்புக்கு பின் இந்நீர் பயன்படுத்த உகந்தது எனக் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு குறைந்த திறன்கொண்ட மாதிரி சுத்திகரிப்பு நிலையத்துக்கான கருவிகள் தருவிக்கப்பட்டு உரிய சுத்திகரிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் தினசரி
40 லட்சம் லிட்டர் திறன்கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பொது மக்களுக்கு விநியோகிக்க பணிகள் மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.1.85 கோடி திட்ட மதிப்பீட்டில் 100 நாள்களுக்கு தினசரி 40 லட்சம் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இச்சுத்திகரிப்பு நிலையம் போரூர் ஏரியின் கரையில் 1,080 சதுர அடியில் குறைந்த பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போரூர் ஏரியின் மொத்த கொள்ளவு 5 கோடி கன அடி ஆகும். இதில் தற்போது 1 கோடி கனஅடி நீர் இருப்பு உள்ளது. தற்போதுள்ள நீர் இருப்பை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இச்சுத்திகரிப்பு நிலையத்தில், ஏரியிலிருந்து நீரேற்ற இரண்டு 50 குதிரை திறன் கொண்ட பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. நீரின் மாசு நீக்குவதற்காக மூன்று கட்டங்களில் வடிகட்டி கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் துகள்கள் நிரப்பப்பட்ட 12 உயர் அழுத்த கலன்களும் அடங்கும். உயர் அழுத்த கலன்களில் நிரப்பப்பட்டுள்ள வடிகட்டி துகள்கள் இஸ்ரேலிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்கொண்டு செல்ல 250 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் 300 மீட்டர் நீளத்துக்கு பதிக்கப்பட்டு போரூர் ஏரியின் அருகில் செல்லும் வீராணம் பிராதான குழாயில் இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணிகளும் நிறைவு பெற்று இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் வீராணம் பிரதான குழாய் மூலம் போரூர் குடிநீர் விநியோக நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வளசரவாக்கம், கே.கே.நகர், ஆலந்தூர் பகுதிவாழ் மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கும் பணியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close