Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹைதராபாத் பள்ளிகளில் ‘ஃபிட்ஜெட் ஸ்பின்னர்’ போன்ற விளையாட்டு பொம்மைகளைக் கொண்டு வரத் தடை

fidget

ஹைதராபாத் பள்ளிகளில், ஃபிட்ஜெட் ஸ்பின்னர், கியூப்   போன்ற விளையாட்டுப் பொம்மைகளை மாணவர்கள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விளையாட்டு நேரங்களில், மாணவர்கள் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக பாரம்பர்ய விளையாட்டுகள், செஸ் மற்றும் விளையாட்டுப் பொம்மைகளை வைத்து விளையாட அனுமதி உண்டு. மற்ற நேரங்களில்,  வகுப்பில் பாடங்களைக் கவனிக்க வேண்டும். மாணவர்கள், பிரேக் நேரங்களில் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நேரங்களிலும்  மறைத்து வைத்துக்கொண்டு விளையாடி வந்துள்ளனர்.

இதனால், மாணவர்கள் மத்தியில் கவனச்சிதறல் ஏற்படுவதோடு, ஆசிரியர்களுக்கும் தொல்லையாக அமைந்துள்ளது. ஆகையால், ஃபிட்ஜெட் ஸ்பின்னர், கியூப் போன்ற விளையாட்டுப் பொம்மைகளை  பள்ளிக்குக் கொண்டுவரக்கூடாது என தடை விதித்துள்ளது பள்ளி நிர்வாகம். மாணவர்கள், 'இந்த மாதிரியான விளையாட்டுப் பொம்மைகளை வைத்து விளையாடுவதால், அவர்களின் பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். ' சிறப்புக் குழந்தைகளுக்கு மட்டும் விளையாட்டுப் பொம்மைகளை வைத்து விளையாட அனுமதிக்க வேண்டும்' என மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close