Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா!

அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் வழங்க முடியாது எனக் கூறியதற்கு ’மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

 

இன்று திருச்சி பாலக்கரையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உதுமான் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துர் ரஹீம் ஆகியோர் சகிதமாக த.மு.மு.க மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லா, “அதிமுக அரசைக் கலைக்க மாட்டோம் என வெங்கைய நாயுடு கூறியுள்ளதன் மூலம் அ.தி.மு.க – பி.ஜே.பி ரகசிய உறவு இருப்பது பகிரங்கமாகி உள்ளது. மத்திய அரசு, சாதனை புரிந்துள்ளதாகக் கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்க முயல்வதையே மோடி அரசு சாதனை எனக் கருதுகிறது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் மீது சோதனை என்கிற பெயரில் மிரட்டி அ.தி.மு.க-வை பணிய வைத்துள்ளது.  

மன்னார் வளைகுடா பகுதியில் பாரம்பர்ய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்திருப்பதுடன், தனியார்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழுமையாகத் தாரைவார்க்க மத்திய அரசு துடித்து வருகின்றது.  அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசு, மக்களுக்கு எதிரான திட்டங்களைத் திணிப்பது மக்கள் விரோத செயல், நேற்று சென்னையில் மத்திய மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழகத்தில் செயல்படுத்தி வரும் மின் திட்டங்கள் குறித்து தமிழக அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது  மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் வழங்க முடியாது எனக் கூறினார். இப்படிக் கூறியிருப்பது சர்வாதிகாரப் போக்கு, இந்தப் பேச்சுக்கு பியூஸ் கோயல் மன்னிப்புக் கேட்க வேண்டும். காஷ்மீர் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது கோழைத்தனமான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close