Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் உலக மக்கள் தொகை தினப் பேரணி!

திருச்சி மாவட்டம், வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று விழிப்பு உணர்வு பேரணி நடைபெற்றது.  

population day

இப்பேரணியில் ஈ.வே.ரா கல்லூரி, கலைக்காவேரி கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, தேசிய கல்லூரி மற்றும் மிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர்கள் எனப் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். வெஸ்ட்ரி பள்ளியில் தொடங்கிய பேரணி, மத்திய பேருந்து நிலையம் வழியாக கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது.

கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். அனிதா, இணை இயக்குநர் டாக்டர்.சம்சத்பேகம், நகர்நல அலுவலர் டாக்டர்.அல்லி, கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர்.ஏகநாதன் ஆகியோர் சகிதமாக வந்த மாவட்ட கலெக்டர் ராசாமணி, இந்தப் பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்பு உணர்வு பேரணியைத் தொடங்கி வைத்து பேசிய கலெக்டர் ராசாமணி, “மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர வைக்க மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரித்து வருகிறோம். மக்கள் தொகைப் பெருக்கத்தை சிறப்புற கட்டுப்படுத்துவதற்கு, மக்களிடையே குடும்பநல விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான குடும்பநல முறைகளை அனுசரிக்கச் செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வருடம் நாம் 28-வது உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்தை மையமாக வைத்து அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு புதிய அலை, புதிய நம்பிக்கை, முழுபொறுப்பு இதுவே குடும்ப வளர்ச்சி என்ற கருத்தை மையமாக வைத்து மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்களின் குடும்பச் சுமையைக் குறைத்து நாடு நலம் பெற, சிறு குடும்ப நெறியைப் பின்பற்றி பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஆண்களும் ஒத்துழைக்க வேண்டும்.

கல்வி அவசியம். அதிலும் பெண் கல்வி மிகவும் அவசியம். குடும்பத்தை அளவோடு வைத்துக்கொள்ள பெண் கல்வி குடும்பப் பொருளாதாரம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அதிலுள்ள குழந்தைகளை உருவாக்குவதில் பெரும் பங்கு உள்ளது. எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இளைஞர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close