Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஈழத்தில் தமிழர் ஆட்சி மலர வேண்டும்'- மரணத்தைத் தழுவிய சிலோன் சண்முகம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தமிழீழ ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். "ஈழத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்" என உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துள்ளார்.

ஆத்தூர் அருகே உள்ள தெற்கு உடையார் பாளையத்தில் வசித்து வந்தவர் சிலோன் சண்முகம் (எ) சோ.மு.சண்முகம் (74). இலங்கையைச் சேர்ந்த இவர் தீவிர தமிழீழ ஆதரவாளர். திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் நால்ரோடு அருகில் உள்ள ஓரிடத்தில் சண்முகம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் அவர் உருக்கமாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டே மரணத்தைத் தழுவியுள்ளார். அந்தக் கடிதத்தில், "கட்சத்தீவை மீட்க வேண்டும். தமிழீழம் மலர வேண்டும். ஈழத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்" என எழுதியுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள சண்முகத்தின் உடல், உடற்கூறு ஆய்வுக்குப் பின் திருப்பூர் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

2009-ம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த கட்டத்தில் இருந்து சோ.மு.சண்முகம் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள அவரது முதல் மகன் முத்து வீட்டில் வசித்து வந்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close