Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் மாநிலத்துக்காகப் பணியாற்றப் போவதில் மகிழ்ச்சி.. தமிழக வீராங்கனை ஜோஷ்னா பளிச்!

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு, தமிழ்நாடு மின்சாரத்துறையில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பணியிடத்துக்கான பணிநியமன ஆணையினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

joshna

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா. மேலும் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிகளில்  பதக்கங்களை வென்று, தற்போது இந்தியாவின் முதல்நிலை விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்கிறார். 

ஜோஷ்னாவை ஊக்குவிக்கும் வகையில் அவரைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து ஜோஷ்னாவிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு ஊக்கம் அளித்துள்ளது. நாட்டுக்காகத் தொடர்ந்து விளையாடுவேன். அடுத்த ஆறு ஏழு வருடத்துக்கு ஸ்குவாஷில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். விளையாட்டுத் துறையில் இருந்து விலகும்போது எனக்கு ஜாப் செக்யூரிட்டியாக தமிழக அரசு கொடுத்துள்ள இந்தப் பணி அமையும். நாட்டுக்காக முழுவீச்சில் விளையாடி கொண்டிருக்கிறேன். அதேசமயம் என் மாநிலத்துக்காக மின் துறை விளையாட்டுப் பிரிவில் பணியாற்றப் போவது மகிழ்ச்சியளிக்கிறது. என் மாநிலத்துக்குப் பணியாற்ற இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன்’ என்றார் உற்சாகத்துடன். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close