Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டக்காரர்களை மிரளவைத்த குடிமன்னர்கள்! இது செந்துறை அட்ராசிட்டி

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்தவர்களுக்கு எதிராக மதுப்பிரியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் முன்பு இயங்கி வந்த டாஸ்மாக் கடை, பொதுமக்கள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த மே 22-ம் தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் சிறுகடம்பூர் செல்லும் சாலையில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தில் நேற்று அரசு டாஸ்மாக் கடை திறப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனை அறிந்த பா.ம.க-வினரும் பொதுமக்களும் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யத் திரண்டனர். இதனிடையே தகவல் அறிந்து டாஸ்மாக் கடைக்கு ஆதரவு தெரிவித்து இடத்தின் உரிமையாளரின் உறவினர்களும் மதுப்பிரியர்களும் கடைப்பகுதியில் திரண்டனர்.

பின்னர் போராட்டக்காரர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த டாஸ்மாக் ஆதரவாளருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை எதிரே வந்த போராட்டக்காரர்கள் புதிதாக டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, கடைப்பகுதியில் இருந்த மதுப்பிரியர்கள், "டாஸ்மாக் கடை வேண்டும்" என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாகப் போலீஸார் மதுப்பிரியர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்போடு மதுக்கடை திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. மதுப்பிரியர்கள் போட்டி போட்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இது குறித்து மது பிரியர்கள் தரப்பிலிருந்து வைத்தியநாதன் பேசுகையில், "நான் வயல் வேலைக்குப் போகிறவன். குடித்தால்தான் இரவு நேரத்தில் தூக்கமே வரும். அப்போதுதான் அடுத்தநாள் வேலைக்குப் போக முடியும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் மக்கள் போராடுறாங்கனு எல்லா கடையும் மூடிட்டா நாங்கள் என்ன பண்றது. என்னைப் போல லட்சக்கணக்கான குடிமக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? இவுங்களே கடையைத் திறந்துவச்சிட்டு குடிக்கசொன்னாங்க நாங்களும் குடிச்சிபழக்கிட்டோம். மக்கள் சொல்றாங்கனு கடையை மூடிட்டா எங்களோட நிலை என்னாகும். யோசிக்க வேண்டாமா இந்த அரசு. ஒவ்வொரு கிராமத்திலும் ஊரின் எல்லையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். நாங்கள் போராடிய பிறகுதான் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. எல்லா மாவட்டத்திலும் மது பிரியர்கள் போராட வேண்டும். போராடினால்தான் வெற்றி கிடைக்கும்" என்றார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close