Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட சென்னை அனல்மின் நிலையத்துக்குக் கெடு விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்!

வட சென்னைப் பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையம் வெளியேற்றிய கழிவை இன்னும் ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தேசிய பசுமை தீர்ப்பாயம்

எண்ணூருக்கு அருகில் வட சென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து உருவாகும் நிலக்கரிச் சாம்பலை அனல் மின் நிலைய நிர்வாகம் கொசஸ்தலை ஆற்றில் கொட்டி வந்தது. 

இப்படிக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம், 'ஒரு வாரத்துக்குள் கழிவுகள் அகற்றப்படவேண்டும். வழக்கை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். ஒரு வாரத்துக்குள் கழிவுகள் அப்புறப்படுத்தாவிட்டால் வடசென்னை அனல்மின் நிலைய இரண்டு அலகுகளும் மூடப்படும்' என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close