Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கர்நாடகாவில் ஏலியன்கள் நடமாட்டமா?

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் அன்டுர் கிராமத்தை இன்று இந்தியாவே அச்சத்தோடு பார்க்கும் இடமாகி உள்ளது. ஆம், இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த அந்த கிராமத்தில் இருக்கும் பரந்த மணல் வெளியில், இருபதுக்கும் அதிகமான மிகப்பெரிய கால் தடங்கள் பதிந்துள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இதைக்கண்ட அந்த கிராம மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். சோதனையில் அந்த கால்தடங்கள் மற்ற எந்த உயிரினத்தின் கால் தடத்தையும்  ஒத்து இருக்கவில்லை. எனவே, இது ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகளின் கால் தடம்தான் என்று கூறப்படுகிறது. இதனால், இந்த விஷயம் அங்கு பெரும் பீதியைக் கிளப்பி உள்ளது. அங்குள்ள பெரியோர்களும் இதைப்போல தங்கள் ஆயுளில் கண்டதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏலியன்கள்

இதுமட்டும் இன்றி சென்ற ஞாயிறன்று அதிகாலை பயங்கரமான சத்தம், அதாவது ஒரு விசித்திரமான மூச்சு விடுவது போன்ற ஒலியை கேட்டதாகவும் கிராம மக்கள் சிலர் கூறுகின்றனர். நிச்சயமாக இது வேற்றுக்கிரவாசிகளின் நடமாட்டம்தான் என்று அவர்கள் சொல்கிறார்கள். இதனால், இரவில் மட்டுமின்றி பகலிலும் அச்சப்பட்டுக்கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கி  இருக்கின்றனர். இப்போது அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து அந்த இடங்களைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். மக்களின் அச்சத்தைப் போக்க மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாவட்ட வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இதுகுறித்து ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில், "அது ஏலியன்ஸ் கால்தடம் இல்லை. மிருகங்களின் கால்தடம்தான். எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று கிராம மக்களுக்கு வனத்துறை கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close