Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரைண்டர் உற்பத்தியாளர்களின் ஜிஎஸ்டி பிரச்னை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்! - மத்திய அமைச்சர் உறுதி!

கிரைண்டர் உற்பத்தியாளர்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன் என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கோவையில் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கு

கோவை  கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற  ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கில் உள்நாட்டு விமான போக்குவரத்து மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்துகொண்டு ஜிஎஸ்டி குறித்துப் பேசினார்.

இந்தக் கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்துகொண்டு ஜிஎஸ்டி-யில் இருக்கும் பிரச்னைகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினர். அவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களை அமைச்சரிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு அதற்கு விளக்கம் கொடுத்தார்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் சின்ஹா. “ஜிஎஸ்டி வரிக்கு நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவிக்கிறார்கள். நான் செல்லும் இடங்களில் ஜிஎஸ்டிக்கு உற்சாகமாக வரவேற்பு இருப்பதை உணரமுடிகிறது. என்றவர்  கிரைண்டர் உற்பத்தியாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியில் உள்ள பிரச்னைகளை மத்திய அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்துகிறேன். விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close