Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர் பலி... கல்வீச்சு... தடியடி... தங்கச்சிமடத்தில் பதற்றம்!

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஜெகன் என்பவர் மீது அரசுப் பேருந்து மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக போலீஸார் கூறினர். இதனால், பிரச்னை வெடித்தது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸார் மீது கல் வீச்சில் ஈடுபட்டதுடன், பேருந்து ஒன்றுக்கும் தீ வைத்தனர். 

தங்கச்சிமடத்தில் பதற்றம்


இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தலைமையில், ஆயுதப்படை போலீஸார் தங்கச்சிமடம் வந்தனர். அவர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால், தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே, மீனவர் ஜெகன் மீது மோதிய பேருந்து ஓட்டுநர் சண்முகவேலு பாம்பன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close