Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திலீப்புக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

திலீப்

கேரள நடிகை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்சர் சுனியின் மீது கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதே வழக்குகள் திலீப் மீதும் சுமத்தப்படலாம் என்று தெரிகிறது. திலீப் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஆறுமாதம் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

நடிகை கடத்தல் வழக்கில் இப்போது, திலீப் 11-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். 'குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படும்போது, திலீப் இரண்டாவது குற்றவாளியாகக் குறிப்பிடப்படுவார்' என்று போலீஸார் கூறுகின்றனர்.

திலீப் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தால், அதற்கு எதிராக வாதங்களை முன் வைக்க போலீஸார் தயாராகிவருகின்றனர். திலீப்பை ஜாமீனில் விட்டால், ஆதாரங்களை அழித்துவிடுவார் என்றும் போலீஸார் கூறுகின்றனர். எனவே, திலீப் இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பு இல்லை என்றே சொல்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close