Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு: 15 பேர்  பலி

ட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை  காரணமாக, அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பபும்பாரே (Papumpare) மாவட்டத்தில், நேற்று (செவ்வாய்கிழமை) மதியம் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. ஏற்கெனவே, வட கிழக்கு மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த  நிலையில், கடந்த நான்கு நாள்களாக, இந்த மாவட்டத்தில் அடைமழை பெய்து வருகிறது.

இச்சம்பவம் குறித்து, மாவட்டத்தின் கூடுதல் துணை ஆணையர்  ஜலஷ் பெர்டின்  கூறுகையில், ''இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. தற்போது, நாங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த மாவட்டத்துக்குள் செல்லும் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்புக்குழு  பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லமுடியாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close