Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு ரூபாய் மருத்துவமனையில் பிறந்த குழந்தை!

one rupee hospital

 

ஒரு ரூபாய் மருத்துவமனையா?! என்று ஆச்சரியத்தில் மூழ்க வேண்டாம். நடந்திருப்பது உண்மைதான். ரயிலில் பயணித்த பெண்ணுக்கு இந்த ஆச்சர்யப் பிரசவம் நடந்துள்ளது. 

மத்திய ரயில்வேயின் மெயின் வழித்தடத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி டிட்வாலாவில் இருந்து தாதர் நோக்கி அந்த மின்சார ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் இருந்த பயணிகள் அவருக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் தவித்தனர். அந்த ரயில் காட்கோபர் ரயில் நிலையம் வந்ததும் பயணிகள் கார்டுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கர்ப்பிணிப் பெண்ணை ரயிலில் இருந்து இறக்கி காட்கோபர் ரயில் நிலையத்தில் இயங்கிய 1 ரூபாய் கிளினிக்கில் அனுமதித்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். 

பிரசவத்தில் அந்தப் பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை இரண்டரைக் கிலோ இருந்தது. பின் தாய் சேய் இருவரும் அருகில் இருந்த ராஜவாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

ரயில் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவ கடந்த மே மாதத்தில் மத்திய ரயில்வே வழித்தடங்களான காட்கோபர், தாதர், குர்லா, வடலா, முல்லுண்டு ஆகிய 5 ரயில் நிலையங்களில் அவசர மருத்துவ அறைகள் என்ற பெயரில் ஒரு ரூபாய் கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்கின்றனர். தினமும் 10 பேர் அவசர சிகிச்சைக்காக இங்கு சேர்க்கப்படுகின்றனர். தற்பொழுது  ஒரு ரூபாய் கிளினிக்கில் பிரசவம் பார்க்கப்பட்டது இதுவே முதல் முறை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close