Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லை மாவட்டத்தில் 50 பேருக்கு டெங்கு அறிகுறி!

நெல்லை மாவட்டத்தில், டெங்கு நோய்க்கான அறிகுறியுடன் 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனால், பொதுமக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

dengu in nellai

கடந்த இரண்டு ஆண்டுகளாக நெல்லை மாவட்ட மக்களை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வந்த நிலையில், இடையில் சில மாதங்கள்  காய்ச்சல் பாதிப்பு இல்லாததால், மக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால், தற்போது தென் மேற்குப் பருவமழை தொடங்கிய பின்னர், டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 4 மாதத்தில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 15-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிர் இழந்துள்ளனர்.

வள்ளியூர் அருகே உள்ள பிலாக்கொட்டைபாறை கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நபருக்குக் குறையாமல், டெங்கு பாதிப்பால் அவதிப்பட்டனர். சில குடும்பங்களில், நான்கு பேர் பாதிக்கப்பட்டு ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டதால், தற்போது டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடையநல்லூர் பகுதியிலும் இந்த நோயின் தீவிரம் அதிகமாக இருந்தது. சுகாதாரத்துறையினரின் முயற்சியால், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.

செங்கோட்டை, தென்காசி. சங்கரன்கோவில், புளியங்குடி, கடையம், வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் அறிகுறியுடன் ஏராளமானோர் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இந்த நோய் பற்றி அறிந்ததும், பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர். மேலும், இத்தகைய நோயாளிகள் குறித்த தகவலை, வெளியில் தெரிந்து விடாதபடி அரசுத் துறையினர் மறைத்துவிடுகின்றனர். 

தற்போது, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மட்டும் 10 பேர் டெங்கு நோய்க்காக சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைபெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 50-க்கும் மேல் இருக்கும் என மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர். டெங்கு தீவிரம் அதிகரித்துவருவதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நோயைக் கட்டுப்படுத்துவதுகுறித்து விரிவான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசியபோது, ‘’காய்ச்சலுடன் வரக்கூடிய பலருக்கும் டெங்கு அறிகுறி தென்படுகிறது. அதனால், அவர்களுக்கு சிறப்புக் கவனத்துடன் சிகிச்சை அளிக்கிறோம். இந்த நோய் பரவாமல் தடுக்க, பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொசுக்களைக் கட்டுப்படுத்தி நோயைத் தடுக்க முடியும்” என்கிறார்கள்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close