Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளை மாளிகையில் என்ன செய்தார் ஒபாமா? புகைப்படங்களை புத்தகமாக வெளியிடுகிறார் மிச்சல்

மிச்சல் ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா, வெள்ளை மாளிகையிலிருந்தபோது எடுத்த புகைப்படங்களை விரைவில் ஒரு புத்தகமாக  வெளியிட இருப்பதாக  வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ புகைப்படக் கலைஞர் அமண்டா லுசிடன் (Amanda Lucidon) தெரிவித்துள்ளார்.

கிட்டதட்ட 150 பிரத்யேகப் புகைப்படங்கள் இடம்பெறவிருக்கும் இந்த புத்தகத்துக்கு ’செசிங்  லைட்’ (Chasing Light) என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து  அமண்டா லுசிடன் கூறுகையில், “மிச்சல் ஒபாமாதான் என் வாழ்வில் ஒளி ஏற்றினார். அவரை முன்னுதாரணமாக கருதுகிறேன். அவர் பலரையும் வழிநடத்தியிருக்கிறார். குறிப்பாக, பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார். அவரைப் போலவே நானும் என் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். இந்த புத்தகம் வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோல, பராக் ஒபாமாவின் புகைப்படங்கள் கொண்ட புத்தகமும் வரும்  நவம்பர் மாதம் வெளிவரவிருக்கிறது. இதனை  வெள்ளை மாளிகையின் மற்றொரு  புகைப்படக் கலைஞரான பிடே செளசா (Pete Souza)  வெளியிடவுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close