Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜிஎஸ்டி-யால் ஒருகோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்'- சிவகாசியில் எம்.பி டி.கே.ரங்கராஜன் பேச்சு

ஜிஎஸ்டி-யால் ஒரு கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவை எம்.பி டி.கே.ரங்கராஜன் இன்று சிவகாசியில் தெரிவித்தார். 


ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிவகாசி பட்டாசுத்தொழில் மற்றும் தீப்பெட்டி தொழில் நலிவடையும் என்று கூறி, கடந்த வாரம் சிவகாசியில் நான்கு நாள்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொழில் நிறுத்தம் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதன் பின் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியதால் வேலை நிறுத்தத்தை உற்பத்தியாளர்கள் வாபஸ் வாங்கினார்கள். 

இந்த நிலையில் ஜிஎஸ்டி-யைத் திரும்பப் பெற வேண்டி சி.பி.எம், சி.ஐ.டி.யூ. பட்டாசுத் தொழிலாளர்களின்  சார்பாக  மாபெரும் பேரணி சிவகாசியில் இன்று நடந்தது. தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்ட இந்த பேரணியில், நகரின் முக்கிய சாலைகளின் வழியாக வந்து இறுதியாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய சி.பி.எம். கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ''பி.ஜே.பி. அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி-யால் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால்   உற்பத்தியாளர்களும் தொழிலார்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இத்தொழில் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-யால் விவசாயிகள், நெசவாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக தற்போது ஒரு கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை வாபஸ் வாங்க வேண்டும்'' என்றார். 

பட்டாசுத் தொழிலாளர்களின்  பேரணி ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்பட விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close