Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்' - அமைச்சர் தங்கமணி அறிமுகம்!

மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் சேவையை தமிழக மின்சாரத்துறை அமைச்சர்  தங்கமணி, இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

அமைச்சர் தங்கமணி

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர், கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் வந்தனர். பேரவைக்கூட்டத்தில் சில நாள்களுக்கு முன்னர், எம்.எல்.ஏ ஒருவர் தன் தொகுதியில் உள்ள மின்கட்டண சேவை மையம் மாற்றப்பட்டதால், மீண்டும் தன் தொகுதியில் கட்டண சேவை மையம் தொடங்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்குச் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி, ''மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அந்த மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தவுடன், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை மிகவும் எளிதாகிவிடும்'' என்றார்.

இன்று, மின் கட்டணம் செலுத்துவதற்கான மொபைல் ஆப் சேவையை மின்சாரத்துறை அமைச்சர்  தங்கமணி அறிமுகம் செய்து வைத்தார். மக்கள் பயன்படுத்தும் முறை குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close