Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவின் 350 கோடி ரூபாய் சொத்து... ஐ.டி.பிடியில் 'போயஸ் கார்டன்' பூங்குன்றன்

    ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்

போயஸ்கார்டனின் 'கேட்' என்று வர்ணிக்கப்பட்ட பூங்குன்றன், இப்போது டெல்லியில் ஐ.டி-யின் பிடியில் இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றாலும்,  ஜெயலலிதாவின் ரூ. 350 கோடி சொத்து விவகாரத்தில் பூங்குன்றனுக்குத் தொடர்பிருப்பதாக வருமான வரித்துறை கருதுகிறது. அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் ஆகிய பொறுப்புகளில் இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்று முதலே, அ.தி.மு.க-வின் கட்சி மற்றும் அரசியலில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த பலரும் ஒதுங்கிக் கொண்டனர். சிலர் ஒதுக்கி வைக்கப்பட்டனர். அப்படி ஒதுங்கிக் கொண்டவர்களில் சென்னை மேயராக இருந்த சைதை சா.துரைசாமி முக்கியமானவர். ஒதுக்கி வைக்கப்பட்டவர்களில், பூங்குன்றன் முக்கியமானவர். அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ கட்சிப் பத்திரிகையான 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்' நாளிதழின் பதிப்பாளர், வெளியீட்டாளர் என்று ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இருந்தவர் பூங்குன்றன். இவைகள் தவிர இன்னும் பிற சொத்துகளுக்கும் நிறுவனங்களுக்கும் பூங்குன்றன் 'சைனிங் அத்தாரிட்டி' பொறுப்பில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. பூங்குன்றன் பொறுப்பில் இருந்த நிறுவனங்கள் குறித்தும், குறிப்பிட்ட ஆவணத்தின் அடிப்படையிலான ரூ.350 கோடி சொத்து குறித்தும் இப்போது விசாரணை போய்க் கொண்டிருக்கிறது.

போயஸ் கார்டனுக்குள் நுழைய முற்படும் கட்சியினர், வி.ஐ.பி-கள்  யாராயினும் அவர்கள், பூங்குன்றன் கண்ணில் பட்டே ஆகவேண்டும். ஏனெனில், பூங்குன்றனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை கார்டனின் வரவேற்பறையை ஒட்டியே அமைந்திருந்தது. தவிர, பூங்குன்றனுக்குத் தனிப்பட்ட அதிகாரங்களையும் ஜெயலலிதா வழங்கியிருந்தார். தற்போது டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையும், ஜெயா தொலைக்காட்சியும் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதே வேளையில், டி.டி.வி தினகரன் கைது போன்ற செய்திகளுக்கும் கட்சி ஊடகமான இவை முக்கியத்துவம் அளித்தன. முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தபோது, இந்த  ஊடகம், அவரை ஒருநாள்கூட செய்திக்குள் கொண்டு வந்தது இல்லை. இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இதே நிலைமைதான். கட்சியைப் பொறுத்தவரையில் சசிகலா, தினகரன், திவாகரன் என்றுதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டனிலேயே தங்கி அவருக்கு உதவியாளராக செயல்பட்டு வந்த பூங்குன்றனை இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் டெல்லியில் இருந்து வந்த ஐ.டி. (வருமான வரிப் புலனாய்வுத்துறை) துறையினர்  விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

கார்டன் ஏரியாவில், "கடந்த ஆறுமாத காலமாகவே இங்கே பூங்குன்றன் மகிழ்ச்சியாக இல்லை. அவர் அடிக்கடி எங்காவது கிளம்பிப் போய்விடுவார். ஜெயலலிதா மரியாதை கொடுத்து வைத்திருந்தது போல் அவரை இப்போது உள்ளவர்கள் மதிப்பது இல்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. சில கோப்புகளில் அவருடைய கையெழுத்து 'சிலருக்கு'த் தேவையாக இருந்ததால், பூங்குன்றன் விட்டு வைக்கப்பட்டார். கார்டனை விட்டு பூங்குன்றன் விரட்டப்பட்டார் என்ற செய்திகள் அடிக்கடி வருவதை முன்பெல்லாம் பார்க்க முடியும். அப்படிச் செய்திகள் வரும்போதெல்லாம் அதைப் பூங்குன்றன் மறுத்து அறிக்கை கொடுப்பார். அந்த அறிக்கையின் பின்னும் ஓர் அரசியல் இருக்கத்தான் செய்தது. இப்போது பூங்குன்றன் குறித்து எந்த அறிக்கை வருவதாக இருந்தாலும் அதை ஐ.டி-தான் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்கிறார்கள். பூங்குன்றனின் வாக்குமூலம், சசிகலா- தினகரன் வகையறாக்களை காப்பாற்றச் செய்யலாம். அல்லது அதை வைத்து அவர்களை அச்சுறுத்தவும் பயன்படுத்தப்படலாம். மொத்தத்தில் டெல்லிக் காய்ச்சல் தொடங்கியிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close